திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்

திரைப்பட நடிகர் பாலாசிங்(67) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். 

திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்

திரைப்பட நடிகர் பாலாசிங்(67) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். 

பாலாசிங், மலையாளத்தில் அறிமுகமானாலும் குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தமிழில் புகழ்பெற்றார். நாசர் எழுதி இயக்கி நடித்த ‘அவதாரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பாலாசிங்.

‘இந்தியன்’, ‘ராசி’, ‘புதுப்பேட்டை’, ‘என்.ஜி.கே.’, ‘மகாமுனி’ உள்ளிட்ட பல படங்களில் பாலாசிங் நடித்துள்ளார். 100-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்த பாலாசிங் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில், 67 வயதாகும் அவருக்கு சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் பாலாசிங் உயிரிழந்தார்.