கோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்!

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகே சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு போட்டிக்காக படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஐ .ஏ .எஸ் அகாடெமியை ,பிப்ரவரி 2 (ஞாயற்றுக்கிழமை) அன்று தொடங்கிவைத்தார் அமைச்சர் எஸ் .பி .வேலுமணி .

கோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் துவக்கம்!
Amma IAS Academy in Coimbatore

கோவையில் ஏழை எளிய, மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் கோவை ஆர்.எஸ். புறத்தில் துவங்கப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் இதனை துவக்கி வைத்தார். கல்வித்துறை சிறப்புற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் கலந்து கொள்ள பயிற்சிகளை மேற்கொள்ள வசதியற்ற கோவை மாவட்ட ஏழை எளிய, மாணவ மாணவியர்களின் கனவுகளை நனவாக்க இந்த பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த பயிற்சி மையத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 500 மாணவ மாணவியர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.