அத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில் தொடங்குகிறது !!!

கோவை கொடிசியாவில் நடைபெற்ற தொடக்க விழா ஒன்றில் பங்கேற்ற தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக கூறினார் ,மேலும் இவ்விழாவில் பல முக்கிய அரசு பிரமூகர்கள் கலந்து கொண்டார்கள்.

அத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில் தொடங்குகிறது !!!
Tamilnadu CM about Athikadavu - Avinashi Water Scheme

கோவை கொடிசியாவில் நேற்று (6.02.2019)  நடைபெற்ற தொடக்க விழா ஒன்றில் பங்கேற்ற தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி கூறியதாவுது : 1,652 கோடி ரூபாய் செலவில்  அத்திக்கடவு - அவினாசி நீர் திட்ட பணி இம்மாத இறுதியில் அடிக்கல் நாட்டி தொடங்கவுள்ளதாக கூறினார் .மேலும் அவர் சேலம் - கோவை யின் எட்டு வழிச்சாலையின் பணியும் விரைவில்  தொடங்கவுள்ளதாக கூறினார்.

  இந்நிகழ்ச்சியில்  நகராட்சி நிர்வாக அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி , தொழில் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. எம்.சி .சம்பத் மற்றும் கிராமப்புற தொழில் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. பி .பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்டார்கள் .