விரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய சின்னத்தம்பி!

கோவை தடாகத்தில் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி என்கிற யானையும் அதை பிடிக்கவந்த கும்கி யானையும் முகாமில் குதூகலமடைந்து விளையாட தொடங்கிவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விரட்ட வந்த கும்கிகளுக்கு விளையாட்டு தோழனாகிய சின்னத்தம்பி!
Chinna thambi Elephant

கோவை தடாகத்தில் பிடிக்கப்பட்டு டாப்ஸ்லிப்பில் விடப்பட்ட சின்னத்தம்பி யானை அங்கிருந்து இடம் பெயர்ந்து கிட்டத்தட்ட கிலோமீட்டருக்கு மேல் பயணித்து உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் பகுதியை வந்தடைந்தது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த யானைக்கு அங்கே கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் தாராளமாக இருந்ததால் அங்கேயே முகாமிட்டு மேய்ந்து கொண்டுள்ளது. மேலும் சின்னத்தம்பியை விரட்ட கொண்டு வரப்பட்ட கும்கி யானை அருகிலே வந்த போது பின்வாங்காமல், அதனுடன் விளையாட்டில் ஈடுபடலானது. தடாகத்தில் பிடிபடுவதற்கு முன் தன் கூட்டத்தோடு வலம் வந்து கொண்டிருந்த சின்னத்தம்பிக்கு, தனிமை படுத்தப்பட்ட பின், மற்ற யானைகளை கண்டு, அவை கும்கிகளாக இருந்த போதும் குதூகலமடைந்து விளையாட தொடங்கிவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.