“புதிய நடிகரான எனக்கு இதுவே இறுதி ஆசை” - விஜய் பட வாய்ப்பு குறித்து அர்ஜூன் தாஸ் 

கடந்த சனிக்கிழமை அன்று ‘தளபதி 64’ படம் குறித்த புதிய அப்டேட் செய்தி வெளியானது.

“புதிய நடிகரான எனக்கு இதுவே இறுதி ஆசை” - விஜய் பட வாய்ப்பு குறித்து அர்ஜூன் தாஸ் 

விஜயுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து இளம் நடிகர் அர்ஜூன் தாஸ் ட்விட்டரில் உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.


நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் மூலம் தமிழுக்கு கிடைத்த புதிய நடிகர் அஜூன் தாஸ். இப்படத்தில் இடம்பெற்ற இவரது வில்லன் கதாபாத்திரம் பரவலான கவனத்தை பெற்றது. இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக தயராகி வரும் திரைப்படம் ‘தளபதி64’. விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கான மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள சிவமோக்கா மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக தெரியகிறது. இந்தப் படப்பிடிப்பில் விஜய்யுடன் நடிகர் விஜய் சேதுபதியும் இணைய உள்ளார். இருவருக்குமான காட்சிகள் அங்கே படமாக்கப்பட உள்ளன. 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ‘தளபதி 64’ படம் குறித்த புதிய அப்டேட் செய்தி வெளியானது. படத்தில் ‘கைதி’ நடிகர் அர்ஜூன் தாஸ் நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானது குறித்து அர்ஜூன் தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

அதில், “இந்தச் செய்தி வெளியானது முதலே நான் பேச முடியாத அளவுக்கு போய் உள்ளேன். இது உங்களது இதயபூர்வமான வாழ்த்தினால் நடந்தது என்றே நம்புகிறேன். மேலும் ஒட்டுமொத்த பிரபஞ்ச சக்தி இணைந்து இதனை நடத்தி உள்ளது. விஜயுடன் இணைந்து நடிக்க போகிறேன். மற்றும் விஜய் சேதுபதியுடன் நடிக்க உள்ளேன். ஒரு புதிய நடிகரான எனக்கு இது நிகரற்ற இறுதி ஆசை. இது ஒரு அதிசிறந்த ஊக்கம்.  ‘கைதி’ வெளியானது முதல் நீங்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு என் அன்பை வெளிப்படுத்த இந்தத் தருணத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

 

''ரஜினிக்கு ரூ.2500 கொடுத்தேன்;ரூ.500 பாக்கி '' - 16 வயதினிலே ரகசியம் உடைத்த பாரதிராஜா