ஸ்ரீசாந்தின் ஐபிஎல் ஃபிக்ஸிங் வழக்கு நிலை என்ன ? - டெல்லி நீதிமன்றம் கேள்வி

2013ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஃபிக்ஸிங் தொடர்பாக ஸ்ரீசாந்த் உள்ளிட்டோருக்கு அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஸ்ரீசாந்த் விளையாடினார். அப்போது அவர் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டார் எனக் குற்றம்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அந்தக் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு, ஸ்ரீசாந்திற்கு கிரிக்கெட்டில் பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது. மேலும் இதில் தொடர்புடைய சாண்டிலியா மற்றும் அங்கீத் சவான் ஆகியோருக்கும் கிரிக்கெட்டில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு பிசிசிஐ அறிவித்தது.

இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது கடந்த 2015ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கில் தொடர்புடைய 36 பேர் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்து வந்த கேரள நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கியது. இதை எதிர்த்து பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்திய பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. 

இந்நிலையில் ஸ்ரீசாந்த் வழக்கில் அனுப்பப்பட்ட நோட்டீஸ் மற்றும் வழக்கின் நிலை என்ன என்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.