நவ. 30க்குள் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

நாகை மற்றும் திருவாரூர்‌ மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

நவ. 30க்குள் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

நாகை மற்றும் திருவாரூர்‌ மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பெய்த வடகிழக்குப் பருவ கனமழையால் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அவை எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து வேளாண்துறை முதமைச்செயலாளர் ககன் தீப் சிங் பேடி இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன், அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். 

கடந்தாண்டு வறட்சியால் சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு மழையால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அத்துடன் பாதிப்புக்கு ஏற்ற வகையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ககன்தீப் சிங் பேடியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது நவம்பர் 30ஆம் தேதிக்குள் பயிர்காப்பீடு செய்யுமாறும், பயிர்ச்சேதம் குறித்த ஆய்வு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, இழப்பீடு குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் விவசாயிகளிடம் கூறப்பட்டது.