அறுவை சிகிச்சைக்குப் பின் அழகாக நடை பழகிய பாண்ட்யா - வீடியோ 

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு அறுவை சிகிச்சை நடந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பின் அழகாக நடை பழகிய பாண்ட்யா - வீடியோ 

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது அறுவை சிகிச்சைக்கு பின்பு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20  தொடரின் போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போட்டிகளில் இருந்து விலகி இருந்த  ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிக்சை நடந்தது. 

தற்போது ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்டியா மருத்துவமனையில் இருந்தவாறே புகைப்படம் வெளியிட்டு அறுவை சிகிச்சை குறித்து டவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. உங்களின் ஆசிர்வாதங்களுக்கு என் நன்றிகள். விரைவில் திரும்புவேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அறுவை சிகிச்சை பிறகு இவர் முதன்முறையாக எழுந்து நடை பழகும் வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஹர்திக் பாண்ட்யா தனது அறுவை சிகிச்சைக்குப் பின் முதன்முறையாக தனது நண்பரின் உதவியுடன் நடப்பது போல் காட்சிகள் பதிவாகியுள்ளன. அத்துடன் அவர் தனது உடல்நிலை குணமடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.