‘சிக்சர் அடிச்சா மும்பைக்கு மாறிடறேன்’: ரோகித்தைக் கலாய்த்த ஆஸி.கேப்டன்!

ரோகித்துக்கு டென்ஷனை ஏற்படுத்தும் விதமாக பேசினார். இதன் மூலம் அவர் தவறு செய்து ஆட்டமிழப்பார் என்பது அவர் எண்ணம்.

‘சிக்சர் அடிச்சா மும்பைக்கு மாறிடறேன்’: ரோகித்தைக் கலாய்த்த ஆஸி.கேப்டன்!

இந்திய வீரர் ரோகித் சர்மாவை, ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் டிம் பெய்ன் கலாய்க்கும் வீடியோ, சமூக வலைத்த ளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது, இந்திய கிரிக்கெட் அணி. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என சமநிலையில் இருக்கும் இரு அணிகளும் இப்போது 3-வது டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. இந்தப் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாளும் ஆதிக்கம் செலுத்தியது.

இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 76 ரன்னும் புஜாரா 106 ரன்னும் கேப்டன் விராத் கோலி 82 ரன்னும் எடுத்தனர். ரோகித் சர்மா 63 ரன்கள் எடுத்தார். பின்னர் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், ரோகித்துக்கு டென்ஷனை ஏற்படுத்தும் விதமாக பேசினார். இதன் மூலம் அவர் தவறு செய்து ஆட்டமிழப்பார் என்பது அவர் எண்ணம்.

அதன்படி, ‘’ரோகித் சிக்சர் அடித்தால் ஐபிஎல்.லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி ஆதரவு தெரிவிக்கிறேன்’’ என்று கலாய்த்தார். இதைக் கேட்டு அருகில் நின்ற ஆரோன் பின்ச் உள்ளிட்ட வீரர்கள் சிரித்தனர். இந்த கலாய், ஸ்டெம்ப்பில் பொருத்தப்பட்டிருந்த மைக்கில் தெளிவாகக் கேட்டது. பெய்னின் கலாயை கண்டுகொள்ளாமல், ரோகித் சர்மா மெதுவாக ஆடினார்.  

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.