பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிராக இளையராஜா புகார்

இளையராஜாவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்கணினி உள்ளிட்ட அலுவலகப் பொருட்களை வைத்து இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிராக இளையராஜா புகார்

இசையமைப்பாளர் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு எதிராக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக விளங்கும் இளையராஜா, பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை பயன்படுத்தி வருகிறார். அதை, பிரசாத் ஸ்டூடியோவின் நிறுவனர் எல்.வி.பிரசாத் அவருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

சென்னை சாலிகிராமத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில்தான் பாடல் பதிவு, சந்திப்புகள் என அனைத்துப் பணிகளையும் இளையராஜா மேற்கொள்கிறார். இந்நிலையில், இளையராஜாவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் எல்.வி. பிரசாத்தின் பேரனும் பிரசாத் ஸ்டூடியோவின் இயக்குனரான சாய் பிரசாத், கணினி உள்ளிட்ட அலுவலகப் பொருட்களை வைத்து அவருக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. 

இதுபற்றி பிரசாத் ஸ்டூடியோஸ் நிர்வாகம் மீது இளையராஜாவின் உதவியாளர் கபார், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.