பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர்: இந்தியா வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர்: இந்தியா வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரை இந்திய அணி வெற்றி பெற்றது.

கஜகஸ்தானிலுள்ள நூர் சுல்தான் நகரில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்  நடைபெற்றது. இதில் நடந்த ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன் மற்றும் சுமித் நகல் ஆகிய இருவரும் தங்களது போட்டிகளில் வெற்றிப் பெற்றனர். 

இதையும் படிக்கலாமே: ரிக்கி பாண்டிங்கை போட்டோ எடுக்க வைத்து தொகுப்பாளினியுடன் போஸ் கொடுத்த ரசிகர்!

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜீவன் நெடுஞ்செழியன் இணை ‌6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பாகிஸ்தான் ஜோடியை வீழ்த்தியது. இதன்பின்னர் நடைபெற்ற கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் சுமித் நகல் பாகிஸ்தானின் யூசஃப் கலீலுக்கு எதிராக மோதினார். இந்தப் போட்டியில் சுமித் 6-1,6-0 என்ற நேர் செட்களில் அவர் வெற்றிப் பெற்றார்.

இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தொடர் சுற்றை, இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது. 

இதையும் படிக்கலாமே:  பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: முச்சதம் விளாசினார் டேவிட் வார்னர்