தளபதி 64ல் இணையும் புது நடிகர் - படக்குழு அறிவிப்பு

கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் தளபதி64 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

தளபதி 64ல் இணையும் புது நடிகர் - படக்குழு அறிவிப்பு

கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் தளபதி64 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

‘பிகில்’ படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். மாளவிகா மேனன் நாயகியாக நடிக்கிறார்.மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், நடிகர் சாந்தனு  உள்ளிட்ட நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. ஒரு மாதக் காலம் டெல்லியிலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு வேலையை செய்து வருகிறது. இதன் அடுத்த கட்டமான மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள சிவமோக்கா மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தப் படப்பிடிப்பில் விஜய்யுடன் நடிகர் விஜய் சேதுபதியும் இணைய உள்ளார். 

இந்நிலையில் படத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த அறிவிப்பை படக்குழு இன்று அறிவித்துள்ளது. கைதி திரைப்படத்தில் தன் குரல் மூலம் வில்லத்தனத்தைக் காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் அர்ஜூன் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது