காரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019

கோவையின் புகழ்பெற்ற காரமடை அரங்கநாதர் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது

காரமடை அரங்கநாதர் கோயில் தேர் திருவிழா 2019
Karamadai Ranganathar temple 2019

கோவையின் புகழ்பெற்ற காரமடை அரங்கநாதர் தேர் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ரங்கநாதர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் காரமடை கோவில் பலத்த வரலாற்று பின்னணியை உடையது. சோழர் காலத்தையதான இக்கோவிலுக்கு கரிகால சோழன், பிற்காலத்தில் திருமலைநாயக்கர் ஆகியோர் உபயம் புரிந்து தொண்டாற்றியுள்ளனர். ராமானுஜரும் விஜயம் புரிந்துள்ளார். அத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் வருடந்தோறும் மாசி மகத்தன்று தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் பிப்ரவரி 13 தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் வாகன உற்சவங்களும், கருட சேவை, திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது. இன்று காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெற்று பின்  பிற்பகலில்  திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தேர் விழாவுக்கு காரமடை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல், கோவை, ஈரோடு, சத்தியமங்கலம் பவானி, மற்றும் கேரளா, மைசூரு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டு திருத்தேர் விழா விமரிசையாக நடைபெற்றது.