சதமடித்தார் மயங்க் அகர்வால் !

இன்றையப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராத் கோலி டக் அவுட் ஆனார்.

சதமடித்தார் மயங்க் அகர்வால் !

இந்தியா - பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையே இந்தூரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார்.

Image

பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்து சதத்தை நோக்கி இருந்தார்.

Image

பின்பு, உணவு இடைவேளைக்கு பின்பு களமிறங்கிய மயங்க் அகர்வால் நிதானமாக விளையாடி சதமடித்தார். அவருக்கு உறுதுணையாக  ரஹானே 42 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களுடன் வலுவான நிலையில் இருக்கிறது.