கோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் மெஹந்தி சர்க்கஸ்.

Mehandi Circus Trailer | Madhampatty Rangaraj, Shweta Tripathi | Sean Roldan | Saravana Rajendran. கோவையிலிருந்து விளம்பர துறையில் தடம் பதித்த வினேஷ் வேலாயுதனின் ஜெயண்ட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கோவையை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாக அறிமுகமாகிறார்.

ஒரு காலத்தில் தமிழகத்தின் முக்கியமான சினிமா நகரமாக விளங்கியது கோவை. பெரும் நட்சத்திரங்கள் எல்லாம் அவர்களது  தொடக்கத்தை ஆரம்பித்த இடம் இது. சினிமா ஒட்டுமொத்தமாக சென்னைக்கு இடம்மாறியபின்னும் இங்கிருந்து நிறைய நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர்களும்  சென்று வாகை சூடினார்கள்.
அந்த வரிசையில், புதிதாக இதோ கோவை மண்ணின் மைந்தர்கள் பங்களிப்பில் இன்னுமொரு தரமான படமாக உருவாகியிருக்கிறது மெஹந்தி சர்க்கஸ்.
கோவையிலிருந்து விளம்பர துறையில் தடம் பதித்த வினேஷ் வேலாயுதனின் ஜெயண்ட் பிலிம்ஸ்  நிறுவனத்தின் தயாரிப்பில், கோவையை சேர்ந்த  மாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாக அறிமுகமாகிறார்.
குக்கூ, ஜோக்கர் ஆகிய பெயர் சொல்லும் படங்களை உருவாக்கிய ராஜு முருகன் கதை, வசனத்தில், அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கம் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் வெளியிடுகிறது. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இதன் டிரெய்லர் இன்று வெளியானது.