ஐஎஸ்எல் கால்பந்து: முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின்‌‌ எஃப்சி !

சென்னை வீரர் நெரிஜூஸ் வல்ஸ்கிஸ் திரில்‌ கோல் அடிக்க சென்னை அணி 2-‌1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஐஎஸ்எல் கால்பந்து: முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின்‌‌ எஃப்சி !

இந்தாண்டு ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை FC அணி‌, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

Image

சென்னையில் நடைபெற்ற போட்டியில், சென்னையின் FC அணியும், ஐதராபாத் எஃப்சி அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதி கோல் எதும் அடிக்காமல்‌ முடிவடைந்த நிலையில், இரண்டாம் பாதியிலும் இரு அணி வீரர்களின் கோல் முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. கூடுதல் நேரத்தில் சென்னை வீரர் ஆண்ட்ரி ஸ்சிம்ப்ரி அசத்தலான கோல் அடித்தார்.

Image

பதிலுக்கு ஐதராபாத் அணி வீரர் மேத்யூ கில்காலோன் பதில் கோல் அடிக்க விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது. இறுதியில் சென்னை வீரர் நெரிஜூஸ் வல்ஸ்கிஸ் திரில்‌ கோல் அடிக்க சென்னை அணி 2-‌1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.