ஒரே ஆண்டில் மூன்று ஐசிசி விருதுகள் - கோலி படைத்த வரலாற்று சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 2018ஆம் ஆண்டிற்கான மூன்று உயர்ந்த ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் வாரியம்) விருதுகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஒரே ஆண்டில் மூன்று ஐசிசி விருதுகள் - கோலி படைத்த வரலாற்று சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 2018ஆம் ஆண்டிற்கான மூன்று உயர்ந்த ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் வாரியம்) விருதுகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ‘ரன் மிஷின்’ என்ற புனைப்பெயர் உள்ளது. ஏனென்றால் கோலி எந்தத் தொடரில் விளையாடினாலும் கோலி பெரும்பாலும் சதம் அல்லது அரை சதம் அடிக்கத் தவறுவதில்லை. இதனால் அவரது ரன்கள் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 அனைத்திலும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டிலும் அவரது ரன் வேட்டை யாரும் எட்டாத வகையில் உயர்ந்திருந்தது. கடந்த ஆண்டில் 11 சதங்களும், 9 அரை சதங்களும் அவர் அடித்துள்ளார். அத்துடன் கடந்த ஆண்டு முதல் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு அணிகளுக்கும் கேப்டனாக இருந்து வருகிறார்.

Related image

இதனால் கடந்த ஆண்டின் சிறந்த ஆண் கிரிக்கெட்டர் விருதை விராட் கோலிக்கு வழங்குவதாக ஐசிசி அறிவித்தது. இதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதுகளையும் விராட் கோலிக்கே வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விருதுகளின் மூலம் ஒரே ஆண்டில் ஐசிசி மூன்று விருதுகளையும் என்ற வரலாற்று சாதனையை கோலி படைத்துள்ளார். 

Image result for virat kohli icc award

இதுதொடர்பாக பேசிய கோலி, “அனைத்து கிரிக்கெட் விருதுகளையும் பெற்றது பெருமையாக உள்ளது. இந்த விருதுகள் எனக்கு கூடுதல் தன்னம்பிக்கையை கொடுக்கிறது. அத்துடன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது. ஏனென்றால் கிரிக்கெட்டால் நாம் ஒரு நிலையை அடையும்போது, அதை நமது விளையாட்டுத் திறன் மூலமே தக்க வைத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். கோலியை போல, இந்திய கிரிக்கெட் அணியின் கீப்பர் ரிஷாப் பண்ட் வளர்ந்து கிரிக்கெட்டர் என்ற விருதை பெற்றுள்ளார்.