“அதானி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்” - மாணிக்கம் தாகூர் எம்.பி.
எதிர்க்கட்சிகள் இணைந்து அதானி தொழில் முறைகளை எதிர்த்து 25-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்போம், என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
விருதுநகர்: “எதிர்க்கட்சிகள் இணைந்து அதானி தொழில்முறைகளை எதிர்த்து 25-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்போம்,” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
இதுகுறித்து விருதுநகரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அதானி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்து அமெரிக்கா அவரை தேடி வருகிறது. ஆனால், மோடி தொடர்ந்து அதானியை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்கிறார். இது நாட்டுக்கு நல்லது கிடையாது. அதானி அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.25 ஆயிரம் கோடியை இந்தியாவுக்கு கொண்டுவந்து சோலார் பிளாண்ட் போடப்படும் என்று ஊழல் செய்துள்ளார். மின்சாரம் விற்க மாநில அரசுகளுக்கு ரூ.2,500 கோடி கொடுப்பதாக அமெரிக்க நிறுவனத்தை ஏமாற்றியுள்ளார்.