“காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்வோம்” - தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவுரை

காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரைக் கடந்து செல்ல வேண்டும் என விசிகவினரை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

“காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்வோம்” - தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவுரை

சென்னை: காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்ல வேண்டும் என விசிகவினரை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவரது சமூக வலைதள பதிவு: களமிறங்கிச் செயல்படுவோர் யாவராயினும் அவர்கள் விமர்சனங்களுக்கு ஆளாவது தவிர்க்க இயலாதது. அவை நேர்மையான, ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இருந்தால், அவற்றிலிருந்து நம்மை நாமே சுய விமர்சனங்களுக்கு உட்படுத்திக் கொள்வதை நடைமுறையாகக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கேற்ப தேவையான மாற்றங்களையும் ஏற்றுக் கொள்கிறோம்.