கோயில் பணத்தை சூறையாடி வரும் இந்து சமய அறநிலைய துறையை கலைக்க வேண்டும்: பொன் மாணிக்கவேல் ஆவேசம்

இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறை​யாடி வருகிறது. எனவே, அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்​டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க​வேல் கூறினார்.

கோயில் பணத்தை சூறையாடி வரும் இந்து சமய அறநிலைய துறையை கலைக்க வேண்டும்: பொன் மாணிக்கவேல் ஆவேசம்

சேலம்: இந்து சமய அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறை​யாடி வருகிறது. எனவே, அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்​டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க​வேல் கூறினார்.

சேலம் சுகவனேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த பொன்​.​மாணிக்க​வேல், பின்னர் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் வரிப் பணத்​திலிருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியம் வழங்​கப்​படு​கிறது. கோயில் கணக்​குகளை தணிக்கை பார்க்க ரூ.228 கோடி செலவிடப்​பட்​டுள்​ளது. தனி மனிதர் தவறு செய்​தால் தண்டிக்​கும் நிலை​யில், அரசே குற்றமிழைக்​கும்​போது என்ன செய்​வது?