நீதி கிடைக்​காமல் எந்த குடிமக​னும் இருக்க கூடாது: மூத்த நீதிபதி கிருஷ்ணகு​மார் கருத்து

மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கான பிரிவு உபசார விழா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

நீதி கிடைக்​காமல் எந்த குடிமக​னும் இருக்க கூடாது: மூத்த நீதிபதி கிருஷ்ணகு​மார் கருத்து

சென்னை: மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கான பிரிவு உபசார விழா, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், நீதிபதி கிருஷ்ணகுமாருடன் நெருக்கமான பந்தத்தை கொண்டுள்ளதால் மரபை மீறி அவருக்கு வாழ்த்து கூறுவதாக குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேஆர்.

ஸ்ரீராம் பேசும்போது, "சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த 8 ஆண்டு காலத்தில் 28,248 பிரதான வழக்குகளை கிருஷ்ணகுமார் முடித்து வைத்துள்ளது பாராட்டுக்குரியது. கடின உழைப்பு, நேர்மை, உண்மை ஆகிய பண்புகளின் மூலம் தந்தையின் விருப்பத்தை பூர்த்தி செய்து தலைமை நீதிபதியாகி இருக்கிறார். தலைமை நீதிபதி நிவாரண நிதியை நீட்டித்து நீதிபதி கிருஷ்ணகுமார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்" என்றார்.