புதிதாக 1,475 பேருந்துகள் கொள்முதல்: பணி ஆணை வழங்கல் என தகவல்

புதிதாக 1,475 பேருந்துகளின் அடிச்சட்டம் தயாரித்து வழங்க அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக 1,475 பேருந்துகள் கொள்முதல்: பணி ஆணை வழங்கல் என தகவல்

சென்னை: புதிதாக 1,475 பேருந்துகளின் அடிச்சட்டம் தயாரித்து வழங்க அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படியும், போக்குவரத்து துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, 2024-25 நிதி ஆண்டுக்கு 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.