“ரெய்டுக்கும் கைதுக்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை” - உதயநிதிக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி
ரெய்டுக்கும் கைதுக்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. 2026-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் வெல்லப்போகும் வலுவான வெற்றிக் கூட்டணி அதிமுக தலைமையில் அமையும், என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
திருநெல்வேலி: “ரெய்டுக்கும் கைதுக்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை. 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெல்லப்போகும் வலுவான வெற்றிக் கூட்டணி, அதிமுக தலைமையில் அமையும்,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் வ.உ.சி.யின் 88-வது நினைவு நாளையொட்டி அவரது மணிமண்டபத்திலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வலுவான கூட்டணி, வெல்லப்போகும் கூட்டணி, வெற்றி கூட்டணி அமையும். கூட்டணியை அமைக்க பழனிச்சாமி சரியாக காய் நகர்த்தி கொண்டிருக்கிறார்.