14 மின்சார ரயில் சேவை தற்காலிக ரத்து: கடற்கரை - தாம்பரம் இடையே பயண நேரத்தில் மாற்றம்
கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகளும், சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, ரயில் சேவையில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகின்றன.
சென்னை: கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகளும், சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, ரயில் சேவையில் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், ரயில்வே பராமரிப்பு நடவடிக்கைகள், இயக்கக காரணங்களுக்காக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே தலா 14 மின்சார ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்துக்கு காலை 6.52, 7.33, 8.43, 9.40, முற்பகல் 11.30,11.41, 12.30, 12.50, பிற்பகல் 3.15, மாலை 4.25, 5.43, 6.35, இரவு 7.57,8.25 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளன.