14 மின்சார ரயில் சேவை தற்காலிக ரத்து: கடற்கரை - தாம்பரம் இடையே பயண நேரத்தில் மாற்றம்

கடற்கரை - செங்​கல்பட்டு மார்க்​கத்​தில் தாம்​பரம் யார்டில் பராமரிப்பு பணிகளும், சென்னை எழும்​பூரில் மேம்​பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரண​மாக, ரயில் சேவை​யில் அவ்வப்​போது மாற்றம் செய்​யப்​படு​கின்றன.

14 மின்சார ரயில் சேவை தற்காலிக ரத்து: கடற்கரை - தாம்பரம் இடையே பயண நேரத்தில் மாற்றம்

சென்னை: கடற்கரை - செங்​கல்பட்டு மார்க்​கத்​தில் தாம்​பரம் யார்டில் பராமரிப்பு பணிகளும், சென்னை எழும்​பூரில் மேம்​பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரண​மாக, ரயில் சேவை​யில் அவ்வப்​போது மாற்றம் செய்​யப்​படு​கின்றன. இந்நிலையில், ரயில்வே பராமரிப்பு நடவடிக்கைகள், இயக்கக காரணங்​களுக்​காக, சென்னை கடற்கரை - தாம்​பரம் இடையே தலா 14 மின்சார ரயில்கள் தற்காலிகமாக நிறுத்​தப்பட உள்ளன.

சென்னை கடற்​கரையி​லிருந்து தாம்​பரத்​துக்கு காலை 6.52, 7.33, 8.43, 9.40, முற்​பகல் 11.30,11.41, 12.30, 12.50, பிற்​பகல் 3.15, மாலை 4.25, 5.43, 6.35, இரவு 7.57,8.25 ஆகிய நேரங்​களில் இயக்​கப்​படும் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்​யப்​பட​வுள்ளன.