“அதானி குழுமத்தில் முதலீடு செய்ததால் ‘எல்ஐசி’க்கு பாதிப்பு” - செல்வப்பெருந்தகை
அதானி குழும முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட மத்திய பாஜக அரசு மறுப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை: அதானி குழும முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட மத்திய பாஜக அரசு மறுப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “அமெரிக்காவில் எப்சிபிஏ அமைப்பு அதானி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாஜக வாய் திறக்கவில்லை. ஆந்திரா, ஜம்மு காஷ்மீரில், ஒடிசா மாநிலங்களில் அதானி நிறுவனம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான முதலீடு செய்துள்ளது.