என்ன நடக்கிறது தஞ்சை தமிழ் பல்கலை.யில்? - துணைவேந்தர் பணியிடை நீக்கத்தின் பரபர பின்னணி

பணி ஓய்வுக்கு 22 நாட்களே இருந்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திருவள்ளுவனை ஆளுநர் திடீரென பணி நீக்கம் செய்திருப்பது அறிவுஜீவிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடக்கிறது தஞ்சை தமிழ் பல்கலை.யில்? - துணைவேந்தர் பணியிடை நீக்கத்தின் பரபர பின்னணி

பணி ஓய்வுக்கு 22 நாட்களே இருந்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திருவள்ளுவனை ஆளுநர் திடீரென பணி நீக்கம் செய்திருப்பது அறிவுஜீவிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அடிக்கடி சர்ச்​சையில் சிக்கும் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்​தில், 2017-2018ம் ஆண்டு​களில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்​களில் 40 பேரை அப்போதைய துணைவேந்தர் பாஸ்கரன் நியமித்​தார்.

இவர்களில் பலருக்கும் உரிய கல்வித் தகுதி இல்லை எனவும், இந்த நியமனங்​களில் முறைகேடு நடந்துள்ள​தாகவும் அப்போது சர்ச்சைகள் வெடித்தன. இது தொடர்பாக, பணி ஓய்வுக்குப் பிறகு துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்​பட்டது.