கனமழை பாதிப்பு: தமிழகத்தில் பயிர் சேதம் கணக்கிடப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல்
கனமழையால் ஏற்படும் பாதிப்பை வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு பயிர்சேத நிலை கணக்கிடப்பட்டு வருவதாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கனமழையால் ஏற்படும் பாதிப்பை வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு பயிர்சேத நிலை கணக்கிடப்பட்டு வருவதாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் நவ.23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கனமழை முதல் அதிகனமழை டெல்டா மாவட்டங்களில் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மழை தொடர்பாக விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழையால் ஏற்படும் பாதிப்பை வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு பயிர்சேத நிலை கணக்கிடப்பட்டு வருகிறது.