‘தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.16,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு’ - அமைச்சர் தகவல்
தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு ரூ.16,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறியுள்ளார்
உடுமலை: தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு ரூ.16,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று கூட்டுறவுத் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கூட்டுறவு வணிக வளாகம், பெட்ரோல் பங்க் ஆகியவை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை ஏற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியது: "தமிழகத்தில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கான கரோனா காலகட்ட நிதி உதவி, மழை வெள்ள பாதிப்பின்போது வழங்கப்பட்ட நிவாரண பொருள்கள் கூட்டுறவு துறை மூலமே விநியோகிக்கப்பட்டது.