தமிழ்ப் பல்கலை.​யில் 40 பேரை பணி நியமனம் செய்தது தொடர்பாக விசா​ரணை குழு: ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தரவு

தமிழ்ப் பல்கலைக்​கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வு​பெற்ற நீதிபதி தலைமை​யில் விசா​ரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தர​விட்​டுள்​ளார்.

தமிழ்ப் பல்கலை.​யில் 40 பேரை பணி நியமனம் செய்தது தொடர்பாக விசா​ரணை குழு: ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தரவு

தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்​கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வு​பெற்ற நீதிபதி தலைமை​யில் விசா​ரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தர​விட்​டுள்​ளார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்​தின் 13-வது துணைவேந்​தராக வி.திரு​வள்​ளுவன் 2021-ம் ஆண்டு டிச.11-ம் தேதி பொறுப்​பேற்​றார். இவரது பணிக்​காலம் டிச. 12-ம் தேதி​யுடன் நிறைவடைய உள்ள நிலை​யில், தமிழக ஆளுநரால் நேற்று முன்​தினம் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டார். 2017-2018-ம் ஆண்டில் பல்கலைக்​கழகத்​தில் துணைவேந்​தராக பாஸ்​கரன் இருந்த​போது, பேராசிரியர், உதவிப் பேராசி​ரியர்கள் 40 பேர் பணி நியமனம் செய்​யப்​பட்​டனர்.