பசுமை மின்சாரத்துக்கென பிரத்யேக வழித்தடம்: மத்திய அரசிடம் திமுக எம்பி வலியுறுத்தல்
பசுமை மின்சாரத்துக்கென பிரத்யேக வழித்தடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசை திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி: பசுமை மின்சாரத்துக்கென பிரத்யேக வழித்தடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசை திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சார அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என் சோமு பேசுகையில், "சூரியசக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது மின்சாரத் தேவைக்கு மட்டுமல்ல மனித குலத்தையும் இந்த பூமிப் பந்தையும் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்கு உண்டு. ஓசோன் மண்டல பாதிப்பிலிருந்து எதிர்காலத் தலைமுறையைக் காக்கும் பொறுப்பும் இந்தவகை மின்சாரத்திற்கு உண்டு.