வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி மனு தாக்கல்
வீட்டு மனை முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: வீட்டு மனை முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன் உள்ளிட்ட சிலருக்கு சென்னை திருவான்மியூரில் வீட்டு மனைகளை மாநில அரசு ஒதுக்கீடு செய்தது.