ஹெச்.ராஜாவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு
பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவனத்தின் ஆண்டு விழாவையொட்டி, 2024-ம் ஆண்டுக்கான சனாதன பெருந்தமிழர் சங்கமம் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி தியாகராய நகரில் நடைபெற உள்ளது. இதில், பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜாவுக்கு சனாதன பெருந்தமிழர் விருது வழங்கப்படவுள்ளது.