‘இந்தியன் 2’ மற்றும் ‘கங்குவா’ பட விமர்சனங்கள்: சமுத்திரக்கனி காட்டம்
சமீபத்தில் இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கங்குவா’.
சமீபத்தில் இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கங்குவா’. இரண்டு படங்களுமே பெரும் தோல்வியை தழுவியது. இரண்டுமே பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.
தற்போது ‘இந்தியன் 2’ மற்றும் ‘கங்குவா’ படத்துக்கான விமர்சனங்கள், சர்ச்சைகள் குறித்து சமுத்திரக்கனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “எதிர்பார்ப்பு அதிகமானதால் இப்படி நடைபெறவில்லை. அனைத்துமே வன்மம் தான். இயக்குநர் சிவா எழுதிய படைப்பு ’கங்குவா’. அதை சிவா படைப்பில் சூர்யா நடித்திருக்கிறார் என்று தான் பார்க்க வேண்டும். அப்படி இருந்திருக்கலாம், இப்படி இருந்திருக்கலாம் என்றால் நீங்கள் எடுங்கள். அவர்களுடைய படைப்பை உங்கள் முன் வைத்திருக்கிறார்கள். எனக்கு பிடிக்கவில்லை, பிடித்திருக்கிறது அவ்வளவு தான்.