“எனது உடல் நலனை கவனிக்க சிறிய இடைவெளி தேவை” - துல்கர் சல்மான்
“எனக்கு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது. நான் என்னுடைய உடல் நலனில் போதிய கவனம் செலுத்தவில்லை. இதற்கு நான் மட்டுமே காரணம்” என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: “எனக்கு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது. நான் என்னுடைய உடல் நலனில் போதிய கவனம் செலுத்தவில்லை. இதற்கு நான் மட்டுமே காரணம்” என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரொமோஷனில் ஈடுப்பட்டுள்ள நடிகர் துல்கர் சல்மான் குறைவான படங்களில் நடிப்பது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.