“என் பொது வாழ்க்கையில் 21 ஆண்டுகளுக்கு முன்...” - விழுப்புரத்தில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுபயணம் மேற்கொண்டு அரசு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நாளை காலை 10 மணியளவில் அரசுத்துறை அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் ஆய்வுகூட்டம் நடைபெறுகிறது.

“என் பொது வாழ்க்கையில் 21 ஆண்டுகளுக்கு முன்...” - விழுப்புரத்தில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு

விழுப்புரம்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுபயணம் மேற்கொண்டு அரசு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நாளை காலை 10 மணியளவில் அரசுத்துறை அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் ஆய்வுகூட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை (நவ.05) பிற்பகல் சென்னையிலிருந்து புறப்பட்டு திண்டிவனம் வந்தடைந்த உதயநிதிக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எம்எல்ஏ மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், செஞ்சி பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.