எலி மருந்தால் 2 குழந்தைகள் உயிரிழப்பு: பூச்சிக்கொல்லி நிறுவனத்துக்கு ‘சீல்’

சென்னை அருகே குன்​றத்தூரை அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதி​யைச் சேர்ந்​தவர் கிரிதரன் (34). இவர் மனைவி பவித்ரா (30), மகள் வைஷாலினி (6), மகன் சாய் சுந்​தரேசன் (1) ஆகியோ​ருடன் வசித்து வந்தார்

எலி மருந்தால் 2 குழந்தைகள் உயிரிழப்பு: பூச்சிக்கொல்லி நிறுவனத்துக்கு ‘சீல்’

சென்னை: சென்னை அருகே குன்​றத்தூரை அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதி​யைச் சேர்ந்​தவர் கிரிதரன் (34). இவர் மனைவி பவித்ரா (30), மகள் வைஷாலினி (6), மகன் சாய் சுந்​தரேசன் (1) ஆகியோ​ருடன் வசித்து வந்தார். கிரிதரன் குன்​றத்​தூரில் உள்ள தனியார் வங்கி​யில் மேலா​ளராக பணிபுரிந்து வருகிறார்.

குழந்தை வைஷாலினி, அதே பகுதி​யில் உள்ள தனியார் பள்ளி​யில் யுகேஜி படித்து வந்தார். வீட்​டில் எலி தொந்​தரவு அதிகமாக இருந்​த​தால், எலிகளை கட்டுப்​படுத்து ​வதற்காக சென்னை தியாகராய நகரில் செயல்​பட்டு வரும் பூச்​சிக்கொல்லி நிறு​வனத்தை தொடர்பு கொண்டு விவரத்தை தெரி​வித்​துள்ளார்.