கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
யானைக்கவுனி கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில், நீரில் அடித்துவரப்படும் கழிவுகளை பொக்லைன்இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.
சென்னை: சென்னையில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், மழைநீரை வெளியேற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை பெய்த நிலையில், மயிலாப்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், நேற்று சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையம் மற்றும் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.