‘கல்லூரிக்குச் செல்லாமல் அடிதடியில் ஈடுபடும் மாணவர்கள்...’ - உயர் நீதிமன்றம் வேதனை
வீட்டு வேலை செய்து பெற்றோர் படிக்க அனுப்பும் நிலையில் கல்லூரி கூட செல்லாமல் மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை: வீட்டு வேலை செய்து பெற்றோர் படிக்க அனுப்பும் நிலையில் கல்லூரி கூட செல்லாமல் மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்.4-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அக்.9-ம் தேதி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.