“கவின் ‘ப்ளடி பெக்கர்’ கதைக்கு சரியாக இருக்கமாட்டார் என சொன்னேன், ஆனால்...” - நெல்சன் பகிர்வு

“இந்தக் கதைக்கு கவின் சரியாக இருப்பார் எனத் தோன்றவில்லை. தனுஷ், விஜய்சேதுபதி என சில பெயர் சிவபாலனிடம் சொன்னேன். பல காட்சிகளில் சிறப்பாக கவின் நடித்திருக்கிறார். கவின் வேண்டாம் என்று ஆரம்பத்தில் நிராகரித்து நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்பது அப்போதுதான் புரிந்தது” என இயக்குநரும், தயாரிப்பாளருமான நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார். 

“கவின் ‘ப்ளடி பெக்கர்’ கதைக்கு சரியாக இருக்கமாட்டார் என சொன்னேன், ஆனால்...” - நெல்சன் பகிர்வு

சென்னை: “இந்தக் கதைக்கு கவின் சரியாக இருப்பார் எனத் தோன்றவில்லை. தனுஷ், விஜய் சேதுபதி என சில பெயர் சிவபாலனிடம் சொன்னேன். பல காட்சிகளில் சிறப்பாக கவின் நடித்திருக்கிறார். கவின் வேண்டாம் என்று ஆரம்பத்தில் நிராகரித்து நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்பது அப்போதுதான் புரிந்தது” என இயக்குநரும், தயாரிப்பாளருமான நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சிவபாலன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் மூலம் நெல்சனும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். படத்தின் கவின் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ - ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நெல்சன், “வேட்டை மன்னன்’ படத்தின்போது என்னிடம் சிவபாலன் சேர்ந்தார். ’ஜெயிலர்’ படம் வரையிலுமே என்னிடம் வேலை பார்த்தார். ‘ஜெயிலர்’ பட சமயத்தில்தான் இந்தக் கதையை சொன்னார்.