“சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” - விமர்சகருக்கான மிரட்டல் குறித்து ஜோஜூ ஜார்ஜ் விளக்கம்

“வாழ்க்கை எனக்கு ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. நான் இன்று இந்த இடத்தை அடைவதற்கு பல தடங்களையும், வலிகளையும் கடந்து வந்துள்ளேன். இந்தப் படத்துக்காக பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளேன். அது வீணாக போவதை பார்த்துகொண்டிருக்கமாட்டேன். விமர்சகருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என நடிகரும், இயக்குநருமான ஜோஜூ ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

“சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” - விமர்சகருக்கான மிரட்டல் குறித்து ஜோஜூ ஜார்ஜ் விளக்கம்

திருவனந்தபுரம்: “வாழ்க்கை எனக்கு ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. நான் இன்று இந்த இடத்தை அடைவதற்கு பல தடைகளையும், வலிகளையும் கடந்து வந்துள்ளேன். இந்தப் படத்துக்காக பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளேன். அது வீணாக போவதை பார்த்துகொண்டிருக்க மாட்டேன். விமர்சகருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என நடிகரும், இயக்குநருமான ஜோஜூ ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘பனி’ திரைப்படம் கடந்த அக்டோபர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை வெளியிட்டதால், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜோஜூ ஜார்ஜ் மிரட்டியதாக ஆதர்ஷ் என்ற சினிமா விமர்சகர் குற்றம் சாட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் ஜோஜூ ஜார்ஜுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அந்த விமர்சகரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதை ஒப்புக்கொண்டுள்ள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.