சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளாக மாற்ற பரிந்துரை
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது.