சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்ததால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு திடீரென உடைந்து நொறுங்கி ஆபத்தான நிலையில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த பயணிகள் அந்த வழியில் செல்வதற்கு பயந்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு திடீரென உடைந்து நொறுங்கி ஆபத்தான நிலையில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையம் வருகை பகுதியில் 5-ம் எண் கேட் வழியாக, ட்ரான்சிட் பயணிகள், விமான ஊழியர்கள் செல்லக் கூடிய கேட்டில் உள்ள 2 கண்ணாடி கதவுகளில் ஒரு கண்ணாடி கதவு (7 அடி உயரம், 3 அடி அகலம்), திடீரென உடைந்து நொறுங்கி, கீழே சிதறி விழும் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தது. இதனை பார்த்த பயணிகள் அந்த வழியில் செல்வதற்கு பயந்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.