தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு

தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.