“தவறு செய்துவிட்டேன்” - சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்த நபர் வருத்தம்!
பாபா சித்திக்கை விட மிகவும் மோசமான நிலைமை சல்மான் கானுக்கு ஏற்படும் என்று மிரட்டல் விடுத்த நபர் தற்போது தான் தவறு செய்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
மும்பை: பாபா சித்திக்கை விட மிகவும் மோசமான நிலைமை சல்மான் கானுக்கு ஏற்படும் என்று மிரட்டல் விடுத்த நபர் தற்போது தான் தவறு செய்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனான நீண்ட கால பகையை முடிக்க சல்மான் கான் ரூ.5 கோடி வழங்க வேண்டும் என்று ஒரு சமீபத்தில் மிரட்டல் செய்தியை மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அனுப்பியிருந்தார். பணத்தை சல்மான் கான் கொடுக்கத் தவறினால், அவரது நிலைமை சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கைவிட மிகவும் மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.