தவெக மாநாடு: அதிகாலையில் சீரான போக்குவரத்து; டன் கணக்கில் தேங்கிய குப்பையால் துர்நாற்றம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் நேற்று (அக்.27) மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. இம்மாநாட்டிற்கு 15,000 வாகனங்கள் வந்ததாகவும், சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்று இருக்க வாய்ப்பு என கூறப்படுகிறது.
விழுப்புரம்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் மாநாட்டுக்கு வந்த வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இன்று (அக்.28) அதிகாலை 3 மணியளவில் தான் சரியானது. அதேபோல், மாநாட்டு திடலில் சுமார் 3 டன் அளவுக்கான குப்பைகள் சேர்ந்ததாலும், மீதமான உணவுகளை பொதுமக்கள் வீசிச் சென்றதாலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் நேற்று (அக்.27) மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. இம்மாநாட்டிற்கு 15,000 வாகனங்கள் வந்ததாகவும், சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்று இருக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.