“தெலுங்கு மக்களைப் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை” - நடிகை கஸ்தூரி விளக்கம்

தெலுங்கு மக்களுக்கு எதிராக நான் பேசியதாக கூறப்படும், அப்பட்டமான நூறு சதவீத  பொய்யை யாரும் நம்ப வேண்டாம், என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். 

“தெலுங்கு மக்களைப் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை” - நடிகை கஸ்தூரி விளக்கம்

சென்னை: “தெலுங்கு மக்களுக்கு எதிராக நான் பேசியதாக கூறப்படும் அப்பட்டமான நூறு சதவீத பொய்யை யாரும் நம்ப வேண்டாம். உண்மை என்பது காலால் நடந்து செல்வதற்குள், பொய்யானது றெக்க கட்டி உலகை மூன்று முறை சுற்றி வந்துவிடும். எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. நான் ஒரு பிராமணர் என்பதால்தான் என்னை குறிவைத்து இதுபோன்ற பொய்களை கூறுகின்றனர். பிராமணர்கள் மட்டும் மீது ஏன் இந்த வன்மம்?” என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

சென்னையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு தெலுங்கு மக்கள் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து, நடிகை கஸ்தூரி இன்று (நவ.4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஒரு காலத்தில் பிராமண சமூகம் மேலே இருந்துவிட்டோம். எனவே, எங்களை கீழே இழுத்து அசிங்கப்படுத்தாதீர்கள். நேற்று நான் பேசும்போது ஒரு சமூகத்தை அதுவும் தவறாக எதுவும் சொல்லவில்லை. அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றுதான் பேசினேன். அதற்காக இவ்வளவு கேள்வி கேட்பவர்கள். பிராமண சமூகத்தை ஒவ்வொரு நாளும் விமர்சிக்கும் போதெல்லாம் எல்லோரும் எங்கே போனார்கள்?