நடிகை ரம்யா பாண்டியனுக்கு நவம்பரில் திருமணம்!

நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளர் லவல் தவானும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகை ரம்யா பாண்டியனுக்கு நவம்பரில் திருமணம்!

சென்னை: நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா பயிற்சியாளர் லவல் தவானும் (Lovel Dhawan) நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அடுத்து ‘ஜோக்கர்’ படத்தில் ரசிகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து, ‘ஆண் தேவதை’, ‘ராமே ஆண்டாலும், ராவண ஆண்டாலும்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘குக் வித் கோமாளி’, ‘பிக்பாஸ்’ உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கவனம் பெற்றார்.