“நான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன்” - துல்கர் சல்மான் பகிர்வு
“நான் நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய ‘மங்காத்தா’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
சென்னை: “நான் நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய ‘மங்காத்தா’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டிய புரமோஷன் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துல்கர் சல்மான், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னுடைய படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்வமாக இருக்கிறேன். இந்தப் படத்தின் ஐடியாவை கேட்கும்போதே எனக்கு மிகவும் பிடித்தது. நம் அனைவருக்கும் கனெக்ட் ஆகும் படம் தான் இது. அப்பா, அம்மா, குழந்தை என பலரும் இருக்கும் குடும்பத்தில் பாஸ்கர் மட்டும் தான் சம்பாதிப்பவர். ஒவ்வொரு மாதமும் கடன் நெருக்கடியால் அவதிப்படுகிறார். இப்படியிருக்கும்போது சூழ்நிலைக்காக ஒரு விஷயத்தில் தள்ளப்படுகிறார். அது தான் கதை.