பழைய ஓய்வூதிய திட்டம் மீதான தமிழக அரசின் கொள்கை முடிவு என்ன? - தலைமைச் செயலக சங்கம் கேள்வி
தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் ஆகியவை மீதான அரசின் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலக சங்கம் வலியறுத்தியுள்ளது.
சென்னை: தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் ஆகியவை மீதான அரசின் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலக சங்கம் வலியறுத்தியுள்ளது.
இதுகுறித்து, சங்க தலைவர் கு.வெங்கடேசன், இணை செயலாளர் லெனின் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தலைமைச்செயலகத்தில் கடந்த நவ.8-ம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை. நிதி சாராத கோரிக்கைகளை மட்டும் தேர்தலுக்குள் நிறைவேற்ற முதல்வர் அறிவுறுத்தியதாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள், நாளிதழ்களில் செய்தி வெளியானது. இது, தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையில் பழைய ஓய்வூதியத் திட்டம் கானல் நீராக போய்விடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.